யாழ் பருத்தித்துறையில் தோட்டாக்களுடன் ஒருவர் கைது

யாழ் பருத்தித்துறையில் தோட்டாக்களுடன் ஒருவர் கைது

யாழ் பருத்தித்துறையில் தோட்டாக்களுடன் ஒருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

01 Oct, 2015 | 9:57 am

யாழ் பருத்தித்துறையில் ரி -56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நேற்று மாலை 7.30 அளவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

அலவாய் வடக்கு பகுதியை சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரை பருத்திதுறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பருத்திதுறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்