நாடளாவிய ரீதியில் சிறுவர் தின கொண்டாட்டங்கள்

நாடளாவிய ரீதியில் சிறுவர் தின கொண்டாட்டங்கள்

எழுத்தாளர் Bella Dalima

01 Oct, 2015 | 9:11 pm

சிறுவர் தின கொண்டாட்டங்கள் நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளிலும் இன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

வட மாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி பழைய மாவட்ட செயலகத்தில் சிறுவர் தின நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் வட மாகாணம், குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 2000 சிறுவர்கள் கலந்துகொண்டனர்.

சிறுவர் நன்னடத்தைத் திணைக்களம் மற்றும் சிறுவர் தேசிய அதிகார சபையினால் மட்டக்களப்பு மாவட்டத்திலும் சர்வதேச சிறுவர் தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளின் பங்கேற்புடன் சிறுவர் தின நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதேவேளை, சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு திருகோணமலை மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

கிண்ணியா பூவரசந்தீவு மத்திய மகாவித்தியாலயத்தில் யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்களில் உயிரிழந்த சிறுவர்களை நினைவுகூர்ந்து 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு நுவரெலியா சிமர்னா ஆலய பாடசாலை சிறுவர்களுக்கான போசாக்கு உணவு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி, கண் வைத்திய பரிசோதனை போன்ற நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இதில் கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் கலந்துகொண்டிருந்தார்.

 

 

யாழில் சிறுவர் தின நிகழ்வுகள்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்