காணாமற்போனோர் தொடர்பில் விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு நியமனம்

காணாமற்போனோர் தொடர்பில் விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு நியமனம்

காணாமற்போனோர் தொடர்பில் விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு நியமனம்

எழுத்தாளர் Bella Dalima

01 Oct, 2015 | 5:04 pm

யுத்த காலப்பகுதியில் காணாமற்போனவர்கள் தொடர்பில் கிடைத்துள்ள முறைப்பாடுகளை விசாரிப்பதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையிலான விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

காணாமற்போனோர் தொடர்பில் சுமார் 16,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவரான முன்னாள் மேல்நீதிமன்ற நீதிபதி மெக்ஸ்வெல் பரணகம குறிப்பிட்டார்.

இதேவேளை, பாதுகாப்புத் தரப்பைச் சேர்ந்தவர்கள் காணாமற்போனமை தொடர்பில் சுமார் 5600 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் கூறினார்.

1983 ஆம் ஆண்டிலிருந்து இதுவரையான காலப்பகுதி வரை காணாமற்போனோர் குறித்து முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவரான மெக்ஸ்வெல் பரணகம மேலும் தெரிவித்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்