ஏலத்தில் தேயிலை கொள்வனவு: புதிய திட்டமொன்றை நடைமுறைப்படுத்தத் தீர்மானம்

 ஏலத்தில் தேயிலை கொள்வனவு: புதிய திட்டமொன்றை நடைமுறைப்படுத்தத் தீர்மானம்

எழுத்தாளர் Bella Dalima

01 Oct, 2015 | 9:26 pm

தேயிலை சபையின் ஊடாக ஏலத்தில் தேயிலையை கொள்வனவு செய்யும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது.

வீழ்ச்சியடைந்து வரும் தேயிலையின் விலையை நிலையாகப் பேண குறுகியகால திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அமைச்சர் நவீன் திசாநாயக்க இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

உலகில் தேயிலையின் கேள்வி வீழ்ச்சியடைந்துள்ளமையால் ஏற்றுமதி செய்யப்படும் தேயிலையின் விலை தொடர்ச்சியாக 12 மாதங்களாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இதற்கு தீர்வாக சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களின் தேயிலைக்கான நிர்ணய விலையை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்