இலங்கை தொடர்பிலான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்

இலங்கை தொடர்பிலான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்

எழுத்தாளர் Bella Dalima

01 Oct, 2015 | 5:31 pm

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிரேரணை தொடர்பான கலந்துரையாடல் மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது கூட்டத்தொடரில் இன்று இடம்பெற்றது.

அமெரிக்கா தலைமையில் முன்வைக்கப்பட்ட இந்த பிரேரணைக்கு இன்றைய தினம் மேலும் 25 நாடுகள் இணை அனுசரணை வழங்குவதாக அறிவித்திருந்தன.

இதனைத்தொடர்ந்து பிரேரணைக்கு எதிரான கருத்துக்கள் முன்வைக்கப்படாத நிலையில் பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்