இன்று சர்வதேச சிறுவர் தினம்

இன்று சர்வதேச சிறுவர் தினம்

இன்று சர்வதேச சிறுவர் தினம்

எழுத்தாளர் Staff Writer

01 Oct, 2015 | 7:29 am

சர்வதேச சிறுவர் தினம் இன்று கொண்டாடப்படுகின்றது.

சிறுவர்களுக்கான நட்புறவான சூழல் உலகை மிளிரச் செய்யும் அழகிய தேசம் என்ற தொனிப் பொருளின் கீழ் இம்முறை சர்வதேச சிறுவர் தினம் கொண்டாடப்படுகின்றது.

சிறுவர் தினத்திற்கான தேசிய நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்வுள்ளது.

யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் காலை 10 மணிக்கு இந்த நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு சபை குறிப்பிட்டுள்ளது.

ஒரு சமூகம் அல்லது நாடு பெரும் வரவேற்பை பெறுவது அந்நாட்டிலுள்ள பிரஜைகள் மற்றும் சமூகம் சிறுவர்கள் தொடர்பாக வௌிப்படுத்துகின்ற அன்பு மற்றும் கரிசணை மூலம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சிறுவர் தினம் குறித்து ஜனாதிபதியால் வௌியிடப்பட்டுள்ள வாழ்த்து செய்தியிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகில் மிகவும் நல்லவைகள் உரித்தாவது சிறுவர்களுக்காகும் என்பதன் காரணத்தினால் மனிதப் பண்பாட்டின் மிகச் சிறந்த அம்சமாக விளங்குவது சிறுவர்கள் எனவும் ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

பிள்ளைகளுக்கான பாதுகாப்பானது பெற்றோர் ஆசிரியர் மிதியவர்கள் மற்றும் சமூகத்திடமிருந்து கிடைக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

எனினும் சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாவும் ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டள்ளது.

இந்த நிலைமை கட்டாயமாக மாற்றி அமைக்க வேண்டும் எனவும் அதற்கான புதிய சட்டங்களை உருவாக்குதல் அல்லது தற்போது காணப்படும் சட்டங்களை திருத்தியமைக்கவோ அல்லது உடனடியாக அமுல்படுத்துவதற்கான தேவை ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

மேலும் சிறுவர் தினத்தில் மாத்திரமில்லாது வருடத்தின் அனைத்து நாட்களிலும் பிள்ளைகள் தொடர்பில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு அவர்கள் எதிர்பார்க்கின்ற வாழ்க்கையை பாதுகாத்து கொடுப்பதற்கு அனைவரும் முன்வர வேண்டும் சிறுவர் தினம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை சிறுவர் உலகிற்கு எதிராக மேற்கொள்ளப்படும் சித்திரவதைகள் துன்புறுத்தல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

எனவே சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச சிறுவர் தினம் தொடர்பில் பிரதமர் வௌியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவர்களின் மனதை அறிந்துக் கொண்டு அவர்களை அன்பாக கவனித்து சமூகம் மற்றும் குடும்பத்தின் ஊடாக சிறுவர்கள் மீது மேற்கொள்ளப்படும் துன்புறுத்தல்களிலிருந்து பாதுகாப்பபை வழங்க வேண்டும் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.

சகல வகையான அனர்த்தங்கள் மற்றும் துஷ்பிரயோகங்களிலுருந்து சிறுவர்களை பாதுகாப்பது பெற்றோர் மற்றும் சமூகத்திலுள்ள அனைவரினதும் பாரிய பொறுப்பு எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அண்மைக்கால நிகழ்வுகளை நோக்கும் போது சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் பாரிய சமூக சீரழிலை ஏற்படுத்தியுள்ளமையையும் பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

சமூகத்தில் நிலவும் பாலியல் துஷ்பிரயோகத்தை ஒழிப்பதற்கும் பாலியல் கல்வியை விரிவுபடுத்தி பாலியல் சம்பந்தமான தௌிவினைப் பெற்றுக் கொடுப்பதற்கும் சமூகத்தை கலாசார மற்றும் ஆன்மீக ரீதியாக வளர்ச்சியடைய செய்வதற்கும் விரிவான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கப்பட வேண்டியது கட்டாயம் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் சர்வதேச முதியோர் தினமும் இன்று கொண்டாடப்படுகின்றது.

சுபீட்சமான நகரும் நீடித்த தன்மையுடைய வயது உள்ளடக்கமும் என்ற தொனிப்பொருளில் இந்த வருடம் முதியோர் தினம் கொண்டாடப்படுகின்றது.

உலகம் முழுவதிலுமுள்ள அனைத்து முதியோர்களையும் அவர்களின் தியாகம் மற்றும் அர்ப்பணிப்பை கொளரவப்படுத்தி அவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் பெருட்டு 1990 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் பிரகடனத்திற்கு ஏற்ப உலக முதியோர் தினம் கொண்டாடப்படுகின்றது.

60 வயதை கடந்த ஆண் பெண் இருபாலரும் முதியோர் என குறிப்பிடப்பட்டுள்ளனர்.

உலகலாவிய ரீதியிர் 191 நாடுகளில் முதியோர் பாதுகாப்பில் இலங்கை 31 ஆவது இடத்திலுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமூகத்தில் வயோதிபர்கள் அநாதரவான நிலை சமூகத்தில் பாரிய பிரச்சினையாகியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச முதியோர் தினம் குறித்து பிரதமர் வௌியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய முதியோர்களின் நலனோம்புகை நடவடிக்கைகள் குறித்து அதிக கவனத்தை செலுத்த வேண்டியது முக்கியமானதொரு விடயம் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

முதியோர்களின் வாழ்க்கையை மேம்படுத்துதல் குடும்பத்தில் பிணைப்பைப் பலப்படுத்தும் சமூக பொருளாதார பின்னணியைக் கட்டியெழுப்புவது பாரிய சவாலாக காணப்படுவதாகவும் பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

எனவே இந்த சவாலை வெற்றிக் கொள்ளும் வகையில் அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து வேலைத்திட்டத்துடனும் கைகோர்த்து செயற்படுவதற்கு நாட்டு மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முதியோர் தினம் தொடர்பில் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த முதியோர் தினத்தில் அனைத்து அரசுகளும் தங்கள் நாட்டிலுள்ள அனைத்து முதியோருக்கும் பாதுகாப்பான முன்றே்றகரமான வாழ்வினை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்