அக்கரைப்பற்றில் மகள்மாரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்ற தந்தை கைது

அக்கரைப்பற்றில் மகள்மாரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்ற தந்தை கைது

அக்கரைப்பற்றில் மகள்மாரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்ற தந்தை கைது

எழுத்தாளர் Bella Dalima

01 Oct, 2015 | 3:40 pm

அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, புளியம்பத்தை கிராமத்தில் மகள்மார் இருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த தந்தையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

1 1 9 என்ற பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்குக் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.

தாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 13 மற்றும் 15 வயதான இரண்டு மகள்மாரையும் தந்தை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

பாதிக்கப்பட்ட சிறுமிகளிடம் பொலிஸ் மகளிர் மற்றும் சிறுவர் பிரிவு அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து சிறுமிகள் மருத்துவ பரிசோதனைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரான தந்தையிடம் அக்கரைப்பற்று பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்