வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் தொடர்கிறது

வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் தொடர்கிறது

எழுத்தாளர் Bella Dalima

30 Sep, 2015 | 9:13 pm

தமது நிலுவைச் சம்பளத்தை வழங்குமாறு கோரி வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்கள் இன்றும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடதாசி ஆலையின் கூரை மீதேறி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.

கடந்த நான்கு மாத சம்பளமும், 30 வீத நிலுவையும் வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடதாசி ஆலை ஊழியர்கள் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்