லிந்துலை பாடசாலை மாணவர்கள் 50 பேர் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதி

லிந்துலை பாடசாலை மாணவர்கள் 50 பேர் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதி

லிந்துலை பாடசாலை மாணவர்கள் 50 பேர் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதி

எழுத்தாளர் Bella Dalima

30 Sep, 2015 | 3:16 pm

லிந்துலை, ராணிவத்தை தமிழ் வித்தியாலயத்தைச் சேர்ந்த சுமார் 50 மாணவர்கள் திடீரென நோய்வாய்ப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மாணவர்கள் இன்று முற்பகல் வைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்டதாக லிந்துலை வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், மாணவர்கள் சுகயீனமுற்றதற்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை என அவர் கூறினார்

இந்த விடயம் தொடர்பாக நுவரெலியா வலயக் கல்விப் பணிமனைக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முற்பகல் 9 மணிக்கும் 10 மணிக்கும் இடைப்பட்ட வேளையில் மாணவர்கள் சுகயீனமுற்றதாக ராணிவத்தை தமிழ் வித்தியாலய அதிபர் தீனதயாளன் தெரிவித்தார்

விஷவாயுவை சுவாசித்ததால் மாணவர்கள் சுகயீனமடைந்திருக்கலாம் எனவும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக லிந்துலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்