மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு சிறந்த தருணம் ஏற்பட்டுள்ளது – செயிட்

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு சிறந்த தருணம் ஏற்பட்டுள்ளது – செயிட்

எழுத்தாளர் Bella Dalima

30 Sep, 2015 | 8:15 pm

இலங்கை தொடர்பில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டுள்ள வரைபு யோசனைத் திட்டம் ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் தற்போது கலந்துரையாடலுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, இந்த யோசனைத் திட்டம் மீது பல்வேறு நாடுகள் தமது நிலைப்பாடுகளை முன்வைக்கவுள்ளன.

பிரித்தானியா, வட அயர்லாந்து, மெசிடோனியா, மொண்டிநீக்ரோ ஆகிய நாடுகளின் அனுசரணையுடன், இலங்கை தொடர்பான யோசனைத் திட்டத்தை அமெரிக்கா சமர்ப்பித்திருந்தது.

அமெரிக்காவின் யோசனைத் திட்டத்திற்கு இலங்கையும் இணை அனுசரணை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் செயிட் ராத் அல் ஹூசைன் இதன்போது தெரிவித்ததாவது;

[quote]இந்த அறிக்கையைத் தயாரிப்பதற்கான சந்தர்ப்பத்தைப் பெற்றுக்கொள்ளும் போது இருந்த நிலமையை விட தற்போது நிலமை மாறியுள்ளது. நல்லாட்சிக்கான மேடையில் இருந்து ஜனாதிபதியும், புதிய அரசாங்கமும் உருவாகியுள்ள நிலமையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில கலந்துரையாடுவதற்கு சிறந்த தருணம் ஏற்பட்டுள்ளது. இது நீண்டகால நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தை ஏற்படுத்துவதற்குக் கிடைத்துள்ள வாய்ப்பாகும். புதிய அரசாங்கமும் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்துடன் சிறந்த உறவுகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளமையைக் காணமுடிகின்றது. கடந்த அரசாங்கம் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தினால் மேற்கொள்ளவிருந்த விசாரணை செயற்பாடுகளைப் படிப்படியாக நிராகரித்தது. ஒத்துழைப்பு வழங்காததுடன், நாட்டிற்குள் பிரவேசிப்பதையும் தடுத்தனர்.[/quote]

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்