புல்மோட்டை கனிமவள கூட்டுத்தாபன ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

புல்மோட்டை கனிமவள கூட்டுத்தாபன ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Bella Dalima

30 Sep, 2015 | 9:09 pm

திருகோணமலை, புல்மோட்டை பகுதியில் உள்ள கனிமவள கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் சிலர் இன்று ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர்.

முன்னறிவிப்பின்றி பணி நீக்கம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கனிமவளக் கூட்டுத்தாபனத்தின் 117 ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமக்கு விரைவில் தொழில் வாய்ப்புக்களை வழங்க வேண்டும் என இவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தாம் கடந்த ஜூன் மாதம் தொழிலில் இணைத்துக்கொள்ளப்பட்ட போதிலும் குறுகிய காலத்திற்குள் தொழிலை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இவர்கள் கவலை தெரிவித்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்