அர்ப்பணிப்பு வரவேற்கத்தக்கது: ஜனாதிபதி மைத்திரிபாலவிற்கு ஒபாமா பாராட்டு

அர்ப்பணிப்பு வரவேற்கத்தக்கது: ஜனாதிபதி மைத்திரிபாலவிற்கு ஒபாமா பாராட்டு

அர்ப்பணிப்பு வரவேற்கத்தக்கது: ஜனாதிபதி மைத்திரிபாலவிற்கு ஒபாமா பாராட்டு

எழுத்தாளர் Bella Dalima

30 Sep, 2015 | 4:58 pm

நாட்டின் ஜனநாயகம் மற்றும் நல்லாட்சியை உறுதிப்படுத்துவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொள்ளும் அர்ப்பணிப்பினை அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா வரவேற்றுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமாவிற்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

எதிர்காலத்தில் நாட்டில் நல்லிணக்கத்தை மேம்படுத்துவது தமது நோக்கம் என இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் வறுமையை ஒழிப்பதற்காக அமெரிக்க அரசாங்கம் பூரண ஒத்துழைப்பு வழங்கும் என அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா கூறியுள்ளார்.

இலங்கையை உரிய அபிவிருத்திப் பாதையில் வழிநடத்தி, 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் ஆணைக்குழுக்கள் மூலம் நல்லாட்சியை உறுதிப்படுத்துவது தமது இலக்கு என இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்