சிறுவர் வன்முறைக்கு எதிராக கடும் சட்டங்களை நடைமுறைப்படுத்துக: வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

சிறுவர் வன்முறைக்கு எதிராக கடும் சட்டங்களை நடைமுறைப்படுத்துக: வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Bella Dalima

30 Sep, 2015 | 9:04 pm

சிறுவர் வன்முறைக்கு எதிராகக் கடும் சட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு கோரி வவுனியாவில் இன்று ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

வவுனியா பஸ் தரப்பிடத்திற்கு முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாண சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வித்தியா மற்றும் சேயாவினைப் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்த குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படவேண்டும் எனவும் இவர்கள் வலியுறுத்தினர்.

இதேவேளை பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்குமாறு கோரி வவுனியாவில் இன்று பேரணியொன்றும் இடம்பெற்றது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் இந்தப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வவுனியா பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆரம்பமான இந்த பேரணி வவுனியா பஸ் தரிப்பிடம் வரை சென்றது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்