உள்ளக விசாரணைக்கு அமெரிக்கா ஆதரவு வழங்கக்கூடாது: தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்

உள்ளக விசாரணைக்கு அமெரிக்கா ஆதரவு வழங்கக்கூடாது: தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Bella Dalima

30 Sep, 2015 | 9:42 pm

இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்த குற்றங்கள் தொடர்பில் உள்ளக விசாரணையை முன்னெடுப்பதற்கு அமெரிக்கா ஆதரவு வழங்கக்கூடாது என வலியுறுத்தி தமிழகத்தில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின் ​போது இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற யுத்த குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்துமாறு இந்தியா வலியுறுத்த வேண்டும் என கோரி தமிழக வாழ்வுரிமை கட்சி நேற்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தது.

சர்வதேச நீதிபதிகளின் அங்கத்துவத்துடனான கலப்பு நீதிமன்றமொன்றை ஸ்தாபித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையினால் சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் டி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையில் சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் நேற்று முன்தினம் (28) ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்