இன்று சர்வதேச மொழிபெயர்ப்பு தினம்

இன்று சர்வதேச மொழிபெயர்ப்பு தினம்

இன்று சர்வதேச மொழிபெயர்ப்பு தினம்

எழுத்தாளர் Staff Writer

30 Sep, 2015 | 10:28 am

செப்டம்பர் 30 அன்று சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் உலகளவில் கொண்டாடப்படுகின்றது. பைபிளின் மொழிபெயர்ப்பாளரான புனித ஜெரோம், மொழிபெயர்ப்பாளரின் புனிதராகவும் போற்றப்படுகிறார்.

பன்னாட்டு மொழிபெயர்ப்பாளர்களின் கூட்டமைப்பு என்ற அமைப்பு 1953 ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து இந்நாள் அவ்வமைப்பினால் கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு நாடுகளிலும் மொழிபெயர்ப்புத் துறையில் ஈடுபட்டுள்ளோருக்கு ஒருமைப்பாட்டைக் காட்டும் முகமாக இவ்வமைப்பு 1991 ஆம் ஆண்டில் இந்நாளைப் பன்னாட்டு ரீதியில் கொண்டாட அழைப்பு விடுத்தது.

இன்றைய கணினி, இணைய, காலத்தில் பழைய மொழிபெயர்ப்புகளெல்லாம் மறுபதிப்புப் பெற்றுள்ளன. புதிய மொழிபெயர்ப்பாளர்கள் தோன்றியுள்ளனர். சமகால நூல்கள் இன்று மொழிபெயர்ப்பாக உடனுக்குடன் கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது. இவ்வகையில் இன்றைய இந்த சர்வதேச மொழிபெயர்ப்புதினம், கோலாகலமாகக் கொண்டாடத்தக்கதாகவே இருக்கிறது எனலாம்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்