அரசியல் கைதிகளின் பிள்ளைகள் யாழில் கவனயீர்ப்புப் போராட்டம்

அரசியல் கைதிகளின் பிள்ளைகள் யாழில் கவனயீர்ப்புப் போராட்டம்

எழுத்தாளர் Bella Dalima

30 Sep, 2015 | 8:56 pm

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் கவனயீர்ப்புப் போராட்டமொன்று யாழ்ப்பாணத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டது.

சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் பிள்ளைகள் இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக ஆரம்பமான கவனயீர்ப்புப் பேரணி, கண்டி வீதியூடாக வட மாகாண முதலமைச்சர் அலுலகம் வரை முன்னெடுக்கப்பட்டது.

பேரணியில் ஈடுபட்டவர்கள் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரனிடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்