யாழ் பல்கலைக் கழகத்தின் கலைப் பீடத்தின் கல்வி நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பம்

யாழ் பல்கலைக் கழகத்தின் கலைப் பீடத்தின் கல்வி நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பம்

யாழ் பல்கலைக் கழகத்தின் கலைப் பீடத்தின் கல்வி நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

28 Sep, 2015 | 8:26 am

யாழ் பல்கலைகழகத்தில் விடுமுறை வழங்கப்பட்ட கலைப் பீட மாணவர்களின் கல்வி நடவடிக்கை இன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

கலைப் பீடத்தின் மூன்றாம் மற்றும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கே இன்று மீண்டும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ் பல்கலைக்கழக பதிவாளர் குறிப்பிட்டார்.

கலைப் பீடத்தின் அனைத்து மாணவர்களையும் கைசாலபதி கலையரங்கில் இன்று காலை 8.30 அளவில் ஒன்றுகூடுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆம் திகதி இரு மாணவர்க் குழுக்களிடையே ஏற்பட்ட மோதலினை அடுத்து கலைப்பிரிவின் மூன்றாம் மற்றும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு காலவரையரையற்ற விடுமுறை வழங்கப்பட்டது.

இதேவேளை குறித்த மோதலுடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு யாழ் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளதை அடுத்து கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்