யாழ். இந்துக் கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவு விழாவின் இறுதி நாள் நிகழ்வுகள் நேற்று இடம்பெற்றன

யாழ். இந்துக் கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவு விழாவின் இறுதி நாள் நிகழ்வுகள் நேற்று இடம்பெற்றன

யாழ். இந்துக் கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவு விழாவின் இறுதி நாள் நிகழ்வுகள் நேற்று இடம்பெற்றன

எழுத்தாளர் Staff Writer

28 Sep, 2015 | 9:22 pm

யாழ். இந்துக் கல்லூரியின் 125ஆவது நிறைவாண்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வில் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கலந்து சிறப்பித்தா்.

யாழ். இந்துக் கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவு விழா கடந்த 22 ஆம் திகதியில் இருந்து தொடர்து 05 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெற்றன.

யாழ் இந்துக் கல்லூரி யின் 125ஆவது ஆண்டு நிறைவு விழாவின் இறுதி நாள் நிகழ்வுகள் நேற்றைய தினம் வெகு விமர்சையாக இடம்பெற்றன.

நேற்றைய இறுதிநாள் நிகழ்வில் வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னனேஷ்வரன் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

இந்துக் கல்லூரியின் கொழும்பு பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் பழைய மாணவன் அருணந்தி ஆரூரன் வழங்கிய கீத லாவண்யம் இசை நிகழ்ச்சியும் இடம்பெற்றது.

அதனையடுத்து கல்லூரி மாணவர்களின் இந்து மாண்மியம் நாட்டிய நாடகம் இடம்பெற்றது.

மாணவர்க்ளின் நாட்டிய நாடகம் அரங்கு நிறைந்த பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தமை விசேடம்சமாகும்.

இதன்போது சிரேஷ்ட ஊடகவியலாளரும், கல்லூரியின் பழைய மாணவரும், யாழ். இந்துக் கல்லூரியின் 125 ஆவது ஆண்டுவிழா குழுவின் இணைப்பாளருமான ஜே. ஶ்ரீ றங்கா, நாட்டிய நாடகத்தில் பங்குபற்றிய மாணவர்கள் மற்றும் அவர்களை நெறியாள்கை செய்த ஆசிரியர்களுக்கு நினைவு சின்னம் வழங்கி கொளரவித்தார்.

கடந்த ஆறு நாட்களாக வெகு விமர்சையாக நடைபெற்ற யாழ். இந்துக் கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவு விழாவின் இறுதியாக கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற வானவேடிக்கை நிகழ்வுடன் விழா இனிதே நிறைவுபெற்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்