மக்காவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்குண்ட இலங்கையர் இருவரை காணவில்லை

மக்காவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்குண்ட இலங்கையர் இருவரை காணவில்லை

மக்காவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்குண்ட இலங்கையர் இருவரை காணவில்லை

எழுத்தாளர் Staff Writer

28 Sep, 2015 | 8:47 am

மக்கா மினாவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்குண்டு இரண்டு இலங்கையர்கள் காணாமல் போயுள்ளனர்.

கொழும்பு வௌ்ளவத்தை பகுதியை சேர்ந்த தம்பதியினரே காணாமல் போயுள்ளனர்.

மக்கா யாத்திரைக்கு சென்ற 58 வயதான அபூபக்கர் அப்துல் ஆஷிஸ் மற்றும் 55 வயதான அவரது மணைவியுமே காணாமல் போயுள்ளனர்.

காணாமல் போனவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஜோடானிலுள்ள இலங்கைக்கான கொன்சியூலர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

அதற்கான குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கொன்சியூலர் அலுவலகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தனது பெற்றோர்களை தேடித்துருமாறு காணாமல் போயுள்ள அப்துல் அஷிஸின் மகன் அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்