புதிய அரசியலமைப்பின் மூலம்  நாட்டின் சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் மேம்படுத்தப்படும்

புதிய அரசியலமைப்பின் மூலம் நாட்டின் சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் மேம்படுத்தப்படும்

புதிய அரசியலமைப்பின் மூலம் நாட்டின் சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் மேம்படுத்தப்படும்

எழுத்தாளர் Staff Writer

28 Sep, 2015 | 1:11 pm

புதிய அரசியலமைப்பொன்றை அறிமுகப்படுத்தி நாட்டின் சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார்.

ஐக்கிய நாடுகளின் 70 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க்கிற்கு சென்றுள்ள ஜனாதிபதி, நியூயோர்க் பௌத்த விகாரையில் கூடியிருந்த இலங்கையர்கள் மத்தியில் உரையாற்றியபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக புதிய அரசாங்கத்திற்கு சர்வதேச சமூகம் பரியளவில் ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மக்கள் தமக்கு வழங்கியுள்ள அதிகாரத்தை மக்களின் நன்மைகருதி உரிய முறையில் பயன்படுத்துவதாகவும் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்