பலத்த மழையால் நாட்டின் பல பகுதிகளிலும் வீதிகள் நீரில் மூழ்கின

பலத்த மழையால் நாட்டின் பல பகுதிகளிலும் வீதிகள் நீரில் மூழ்கின

பலத்த மழையால் நாட்டின் பல பகுதிகளிலும் வீதிகள் நீரில் மூழ்கின

எழுத்தாளர் Staff Writer

28 Sep, 2015 | 7:48 pm

இன்று இரவு வேளையிலும், நாளைய தினமும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அடை மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

கடும் மழை காரணமாக மண்சரிவு அபாயம் விடுக்கப்பட்ட பகுதிகளில் தற்போது மண்சரிவு அபாயம் எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளது.

எனினும் சில பகுதிகளில் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என கட்டட ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கடும் மழை காரணமாக காலி மாவட்டத்தின் பத்தேகம – அகலிய, பத்தேகம – உடுகம, நாகொட – உடுகம ஆகிய வீதிகள் இன்று (28) மதியம் நீரில் மூழ்கியிருந்தன.

காலி – பத்தேகம பிரதான வீதியின் தொடம்கொட பிரதேசமும் நீரில் மூழ்கியிருந்தது.

காலி பொல்அது மோதர கங்கை பெருக்கெடுத்தமையின் காரணமாக ஒமதுவ – யக்கலமுல்ல மற்றும் இமதுவ – கோதாகொட ஆகிய வீதிகளும் மேலும் சில தாழ் நிலப்பகுதிகளும் நீரில் மூழ்கியிருந்தன.

கரன்தெனிய – ஊரகஸ் சந்தி வீதியும் இவ்வாறு நீரில் மூழ்கியிருந்தது.

இதேவேளை கடும் மழை காரணமாக மாத்தறை நகரின் சில குறுக்கு வீதிகளும் வல்கம பிரதேசத்தின் சில வீடுகளும் நீரில் மூழ்கின.

மெதிரிகிரிய, மீகஸ்வெவ, விகாரகம ஆகிய பிரதேசங்களை ஊடறுத்து நேற்று (27) பிற்பகல் வீசிய பலத்து காற்று காரணமாக ஆறு வீடுகள் சேதமடைந்துள்ளன.

கந்தளாய் நகரிலும் 20 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்