சேயா சதெவ்மி கொலைச்  சந்தேகநபரிடம் மரபணு சோதனை மேற்கொள்வதற்கு நீதிமன்றம் உத்தரவு

சேயா சதெவ்மி கொலைச் சந்தேகநபரிடம் மரபணு சோதனை மேற்கொள்வதற்கு நீதிமன்றம் உத்தரவு

சேயா சதெவ்மி கொலைச் சந்தேகநபரிடம் மரபணு சோதனை மேற்கொள்வதற்கு நீதிமன்றம் உத்தரவு

எழுத்தாளர் Staff Writer

28 Sep, 2015 | 9:10 am

ஐந்து வயது சிறுமி சேயா சதெவ்மியின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரிடம் மரபணு சோதனை மேற்கொள்வதற்கு நீதிமன்றத்தின் உத்தரவு பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கன்றனர்.

சந்தேகநபர் தொடர்பில் சட்ட வைத்திய பரிசோதனை மேற்கொள்வதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த ஜெயக்கொடி குறிப்பிட்டுள்ளார்.

சந்தேகநபரை மினுவாங்கொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் நீதவானின் உத்தரவிற்கமைய சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசேட விசாரணை பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை அதுருகிரிய பகுதியில் 10 வயது சிறுவன் வெட்டிக் கொலை செய்யப்பட்டமை குறித்து கைதான சந்தேகநபர் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்