சிலந்தியை கொல்லும் முயற்சியில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு தீ வைத்த நபர் (Video)

சிலந்தியை கொல்லும் முயற்சியில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு தீ வைத்த நபர் (Video)

எழுத்தாளர் Staff Writer

28 Sep, 2015 | 5:09 pm

மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்துவதா? என்கிற பழமொழியை அறியாததாலோ, என்னவோ! சிலந்திக்கு பயந்த ஒருவர் எரிபொருள் நிரப்பு நிலையத்தை எறித்துள்ளார்.

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் உள்ள டெட்ராய்ட் நகரில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தனது காருக்கு பெற்றோல் போட்டு கொண்டிருந்த நபர், அங்கிருந்த சிலந்தியை கண்டதும் பயந்துபோய் தனது லைட்டரைப் பற்ற வைத்து அதை விரட்ட முற்பட்டார்.

உடனடியாக, அருகேயிருந்த தீயணைக்கும் கருவியை அவசரமாக எடுத்து பெரும் விபத்திலிருந்து அந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தை காப்பாற்றினார்.

அதிர்ச்சியூட்டும், இந்த சம்பவம் அந்த நிலையத்தின் சி.சி.டி.வி.யில் பதிவாகியுள்ளது.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்