சந்திரன் சுருங்குவதற்கு பூமியே காரணம்: ஆய்வில் தகவல்

சந்திரன் சுருங்குவதற்கு பூமியே காரணம்: ஆய்வில் தகவல்

சந்திரன் சுருங்குவதற்கு பூமியே காரணம்: ஆய்வில் தகவல்

எழுத்தாளர் Staff Writer

28 Sep, 2015 | 4:35 pm

அமெரிக்காவின் ஸ்மித்சோனியன் தேசிய விமானம் மற்றும் விண்வெளி அருங்காட்சியகத்தின் தாமஸ் ஆர்.வோட்டர்ஸ் என்பவர் தலைமையிலான ஆய்வுக் குழு ‘சந்திரன் சுருங்வதற்கு பூமிதான் காரணம்’ என தமது ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பல கோடி ஆண்டுகளாக சந்திரனின் அளவு குறைந்துகொண்டே வருகின்றது. எனினும், கடந்த 2010 ஆம் ஆண்டு சந்திரனின் ஓரங்களில் சுமார் 14 விரிசல்கள் தென்பட்டதாக கணக்கிடப்பட்டது.

இது தற்போது வெறும் 5 ஆண்டுகளில் 3200 விரிசல்களாக அதிகரித்துள்ளது, மிகவும் அதிர்ச்சியளிப்பதாக இந்த ஆய்வுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சந்திரனின் மேற்பரப்பை சோதனை செய்துவந்த இந்தக் குழு, கடலின் அலைகள் சந்திரனை இழுப்பதால்தான் இவ்வாறான விரிசல்கள் சந்திரனில் உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.

சந்திரன் சுருங்கினாலும் அது சீரான முறையிலேயே சுருங்குவதாகவும், அதன் அனைத்து பக்கமும் ஒரே மாதிரி விரிசல் அடைவதாகவும் இக்குழு தெரிவித்துள்ளது.

சந்திரனின் அளவு குறைந்து கொண்டே வந்தால், அது பூமியின் சுற்றுப்பாதையில் ஒரு நிலையற்ற தன்மையை ஏற்படுத்தும். மேலும், அது பூமியை இன்னும் நெருங்கி வரும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்