கொத்மலை மண்சரிவில் பாதிக்கப்பட்ட சுமார் 30 பேர் மாத்திரமே தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர்

கொத்மலை மண்சரிவில் பாதிக்கப்பட்ட சுமார் 30 பேர் மாத்திரமே தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர்

கொத்மலை மண்சரிவில் பாதிக்கப்பட்ட சுமார் 30 பேர் மாத்திரமே தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர்

எழுத்தாளர் Staff Writer

28 Sep, 2015 | 9:04 am

கொத்மலை லில்லிஸ்லேண்ட் தோட்டத்தில் தொடர்ந்தும் 19 குடும்பங்கள் மண்சரிவு அபாய எச்சரிக்கைக்கு உள்ளாகியுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நிலையத்தின் மண்சரிவு எச்சரிக்கை மற்றும் முன்னெச்சரிக்கை முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ் பண்டார தெரிவித்துள்ளார்.

​லில்லிஸ்லேண்ட் தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் பாதிக்கப்பட்ட சுமார் 30 பேர் வரை மாத்திரமே தங்காலிக முகாமில் தங்கியுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட ஏனைய மக்கள் தங்களின் குடியிருப்புகளுக்கு திரும்பியுள்ளதாக நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

கடந்த வௌ்ளிக்கிழமை லில்லிஸ்லேண்ட் தோட்டத்தில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது 7 வீடுகள் சேதமடைந்ததாக இடர் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்