கொட்டதெனியா சிறுமி கொலையின் சந்தேகநபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

கொட்டதெனியா சிறுமி கொலையின் சந்தேகநபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

கொட்டதெனியா சிறுமி கொலையின் சந்தேகநபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

எழுத்தாளர் Staff Writer

28 Sep, 2015 | 12:02 pm

கொட்டதெனியா சிறுமியின் கொலை தொடர்பில் கைதான 17 வயது மாணவனும் ஏனைய சந்தேகநபரும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மினுவங்கொட பிரதான நீதவான் டீ.ஏ ருவன் பத்திரன முன்னிலையில் சந்தேகநபர்களை ஆஜர்படுத்தியதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களின் மரபணு பரிசோதனை அறிக்கை இதுவரை கிடைக்கவில்லை எனவும் பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

அதற்கமைய சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும் இரண்டாம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவானால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

5 வயது சிறுமி சேயா சதெவ்மி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்