கடல் வழி  ஆட்கடத்தல் தொடர்பான அவுஸ்திரேலியாவின் கொள்கையில் மாற்றமில்லை

கடல் வழி ஆட்கடத்தல் தொடர்பான அவுஸ்திரேலியாவின் கொள்கையில் மாற்றமில்லை

கடல் வழி ஆட்கடத்தல் தொடர்பான அவுஸ்திரேலியாவின் கொள்கையில் மாற்றமில்லை

எழுத்தாளர் Staff Writer

28 Sep, 2015 | 1:20 pm

கடல் வழியாக முன்னெடுக்கப்படுகின்ற ஆட்கடத்தல் தொடர்பிலான தமது அரசாங்கத்தின் கொள்கையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என கொழும்புக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் வலியுறுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமர் மெல்கம் டர்ன்புல் , நாட்டின் எல்லைப் பாதுகாப்பு விடயத்தில் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய படகு மூலம் சட்டவிரோதமாக வருவோரை தடுப்பதற்கு தொடர்ந்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவுஸ்திரேலிய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

படகுமூலம் அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்க முயற்சிப்போர், கைது செய்யப்பட்டு மீண்டும் இலங்கைக்கோ அல்லது பெப்புவா நியூகினியா மற்றும் நவுரு தீவுகளுக்கோ அனுப்பிவைக்கப்படுவார்கள் எனவும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது

சட்டவிரோதமாக படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்கும் எவரும் அவுஸ்திரேலியாவில் குடியேற்றப்பட மாட்டார்கள் எனவும் அந்த அறிக்கையில் மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்