ஐ.நா அமைதிகாக்கும் பணிகள் தொடர்பான மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பங்கேற்பு

ஐ.நா அமைதிகாக்கும் பணிகள் தொடர்பான மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பங்கேற்பு

ஐ.நா அமைதிகாக்கும் பணிகள் தொடர்பான மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பங்கேற்பு

எழுத்தாளர் Staff Writer

28 Sep, 2015 | 8:56 am

ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையின் 70 ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்பதற்கு நிவ்யோர்க்கிற்கு சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐ.நா அமைதிகாக்கும் பணிகள் தொடர்பான மாநாட்டில் இன்று கலந்து கொள்ளவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையினூடாக இலங்கைக்கு கிடைக்கும் ஒத்துழைப்புகள் குறித்து இதன்போது ஜனாதிபதி தௌிவுபடுத்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பணிப்பாளர் தர்மசிறி பண்டார ஏக்கநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஐ.நா மாட்டின் பிரதான அமர்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன உரை நிகழ்த்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நியூயோர்க்கில் இடம்பெறுகின்ற ஐநா பொதுச்சபை கூட்டத் தொடரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று உரை நிகழ்த்தினார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்