பருத்தித்துறையில் ஆலய உற்சவமொன்றில் நகை திருட்டில் ஈடுபட்ட 5 பெண்கள் கைது

பருத்தித்துறையில் ஆலய உற்சவமொன்றில் நகை திருட்டில் ஈடுபட்ட 5 பெண்கள் கைது

பருத்தித்துறையில் ஆலய உற்சவமொன்றில் நகை திருட்டில் ஈடுபட்ட 5 பெண்கள் கைது

எழுத்தாளர் Staff Writer

27 Sep, 2015 | 2:30 pm

 

யாழ் பருத்தித்துறை பகுதியில் ஆலய உற்சவமொன்றில் நகை திருட்டில் ஈடுபட்ட 5 பெண்கள உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ளவர்களில் 3 பேர் இந்திய பிரஜைகள் என பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ஏனைய நால்வரும் சிலாபம் மற்றும் நீர்கொழும்பு பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.

திருட்டிற்கு பயன்படுத்திய வேன் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களால் திருடப்பட்ட 20 தங்க சங்கிலிகளும் 04 தங்கப் பென்டன்களும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பருத்திதுறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்