இன்று உலக சுற்றுலா தினம்

இன்று உலக சுற்றுலா தினம்

இன்று உலக சுற்றுலா தினம்

எழுத்தாளர் Staff Writer

27 Sep, 2015 | 9:47 am

‘பில்லியன் சுற்றுலாப் பயணிகளுக்கு பில்லியன் கணக்கான சந்தர்ப்பம்’ என்பதே இந்த வருடத்திற்கான தொனிப்பொருளாகும்.

கடந்த வருடத்தில் மாத்திரம் உலகம் முழுவதிலும் 1.3 பில்லியன் மக்கள் சுற்றுலாவில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் கடந்த வருடத்தில் மாத்திரம் 1.5 டிரிலியன் ரூபான சுற்றுலாத்துறையில் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

இந்த வருடம் சுற்றுலாத்துறையில் 3.4 வீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக ஐ.நா அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டில் சுற்றுலாத்துறையை விஸ்தரிப்பதற்கான பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்