அத்துருகிரியவில் 10 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் வெளியானது

அத்துருகிரியவில் 10 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் வெளியானது

அத்துருகிரியவில் 10 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் வெளியானது

எழுத்தாளர் Staff Writer

27 Sep, 2015 | 10:00 am

அத்துருகிரிய கப்புறுகொட பகுதியில் 10 வயது சிறுவன் வெட்டிக் கொலை செய்யப்பட்டமைக்கு சிறுவனின் தந்தையுடன் நீண்டகாலமாக நிலவிவந்த தகராறே காரணம் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் நேற்று (26) மாலை கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து இந்த விடயம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தந்தையை பழி வாங்கும் நோக்குடன் சிறுவனை கொலை செய்ததாக சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பியகம பகுதியில் வைத்து சந்தேகநபர் நேற்று (26) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துருகிரிய கப்புறுகொட பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் நேற்று முந்தினம் (25) 10 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்