அதிக மழைக் காரணமாக 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம்

அதிக மழைக் காரணமாக 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம்

அதிக மழைக் காரணமாக 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம்

எழுத்தாளர் Staff Writer

27 Sep, 2015 | 8:58 am

நாட்டில் நிலவும் அதிக மழைக் காரணமாக 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பதுளை,இரத்தினபுரி, கேகாலை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிலையத்தின் மண்சரிவு மற்றும் இடர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ் பண்டார குறிப்பிட்டுள்ளார்.

குறித்த மாவட்டங்களில் மலைமேடு மற்றும் தாழ்நிலப் பகுதிகளில் வாழ்வோர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதிகளில் கற்பாறைகள் சரிந்துவிழும் அபாயம் நிலவுவதாகவும் தேசிய கட்டட ஆய்வு நிலையத்தின் மண்சரிவு மற்றும் இடர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ் பண்டார கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்