100 மீட்டர் ஓட்டப் போட்டியில் 105 வயது ஜப்பானியர் கின்னஸ் சாதனை

100 மீட்டர் ஓட்டப் போட்டியில் 105 வயது ஜப்பானியர் கின்னஸ் சாதனை

100 மீட்டர் ஓட்டப் போட்டியில் 105 வயது ஜப்பானியர் கின்னஸ் சாதனை

எழுத்தாளர் Bella Dalima

24 Sep, 2015 | 3:20 pm

ஜப்பானில் 105 வயதைக் கடந்த ஹிடோகிசி மியாஸாகி என்பவர் 100 மீட்டர்களை 42.22 விநாடிகளில் ஓடிக் கடந்து,105 வயதுடையவர்களுக்கான பிரிவில் உலகின் மிக வேகமான ஓட்டப் பந்தய வீரர் என்ற கின்னஸ் சாதனையைப் புரிந்துள்ளார்.

இந்த வயதில் அவர் இவ்வளவு வேகத்தில் ஓடியிருப்பது மருத்துவ உலகில் ஒரு விந்தை எனக் கூறப்படுகிறது.

எனினும், தனது வேகத்தில் தனக்கு திருப்தி இல்லை என்று கூறியுள்ள மியாஸாகி, கூடுதலாகப் பயிற்சி மேற்கொள்ளவிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், உலகின் மிக வேகமான ஓட்டப் பந்தய வீரர் உசைன் போல்ட்டுடன் போட்டியிடுவதே தனது இலட்சியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே, 100 வயது நிரம்பியவர்களுக்கான 100 மீட்டர் போட்டியில் 29.83 விநாடிகளில் கடந்த இவர் படைத்த சாதனை இதுவரை முறியடிக்கப்படவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்