வட மாகாண சித்த மருத்துவக் கண்காட்சி ஆரம்பம்

வட மாகாண சித்த மருத்துவக் கண்காட்சி ஆரம்பம்

எழுத்தாளர் Bella Dalima

24 Sep, 2015 | 9:24 pm

வட மாகாணத்தின் சித்த மருத்துவக் கண்காட்சியும் மாநாடும் இன்று ஆரம்பமானது.

கிளிநொச்சி – கல்மடு நகரிலுள்ள சித்த மருத்துவ மூலிகைத் தோட்டத்தில் இந்த நிகழ்வு நடைபெறுகின்றது.

வட மாகாண சித்த மருத்துவக் கண்காட்சி மற்றும் மாநாட்டை வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று காலை ஆரம்பித்து வைத்தார்.

இதன்போது, வட மாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம், இந்திய துணைத்தூதுவர் ஏ.நடராஜா உள்ளிட்ட மேலும் பலர் பிரசன்னமாகியிருந்தனர்.

வட மாகாண சித்த மருத்துவக் கண்காட்சி மற்றும் மாநாடு இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்