ரக்னா லங்கா அல்ல, அனைத்தையும் அவன்கார்ட் நிறுவனமே முன்னெடுத்துள்ளது – பாட்டலி

ரக்னா லங்கா அல்ல, அனைத்தையும் அவன்கார்ட் நிறுவனமே முன்னெடுத்துள்ளது – பாட்டலி

எழுத்தாளர் Bella Dalima

24 Sep, 2015 | 7:28 pm

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவன்கார்ட் சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிடம் கேள்வி எழுப்பினர்.

இதன்போது, அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்ததாவது;

[quote]அவன்கார்ட் சம்பவத்தில் துப்பாக்கி பயன்பாட்டின் போது குற்றமொன்று இழைக்கப்பட்டுள்ளது என்பதே எமது நம்பிக்கை. இரண்டாவது விடயம் என்னவென்றால், அவன்கார்ட் நிறுவனத்திற்கு மாத்திரம் இந்த வர்த்தக நடவடிக்கையைப் பெற்றுக்கொடுக்க பாதுகாப்பு அமைச்சு செயற்பட்டமை ஊடாக போட்டித்தன்மை இல்லாமல் ஆக்கப்பட்டு இலஞ்சம், ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளன என்பதே எமது எண்ணமாக இருக்கின்றது.[/quote]

கேள்வி : துப்பாக்கி என்று கூறுகின்ற போது, அதன் கருத்து என்ன?

பாட்டலி : பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் 3500 துப்பாக்கிகள் இருந்தன அல்லவா. அவ்வாறு என்றால், துப்பாக்கிகளை என்னாலோ அல்லது உங்களாலோ கொண்டு செல்ல முடியுமா?

கேள்வி : அமைச்சர் அவர்களே இந்த இடத்தில் பிரச்சினையொன்று உள்ளது. அவன்கார்ட் நிறுவனம் தொடர்பில் ரக்னா லங்கா நிறுவனம் இணை நிறுவனமாக செயற்பட்டுள்ளது. ரக்னா லங்காவையே இராணுவத்திற்கு எடுத்துள்ளனர்.

பாட்டலி : ரக்னா லங்காவின் பின்னால் மறைந்து இந்த கொடுக்கல் வாங்கலை முன்னெடுத்துள்ளதாக நான் மிகவும் பொறுப்புடன் கூறிக்கொள்கின்றேன். இந்த கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பாரிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டவர்களுக்கும் துப்பாக்கிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதேபோன்று, சர்வதேச குற்றவாளிகளுக்கு இவர்கள் பயிற்சிகளை வழங்கியுள்ளனர் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. உங்களாலும் என்னாலும் கத்தியொன்றைக் கூட கொண்டு செல்ல முடியாத இந்த நாட்டில் இரு நபர்களுக்கு மாத்திரம் இதனை முன்னெடுக்க எவ்வாறு முடிந்தது? இலங்கை கடற்பரப்பில் 3500 தன்னியக்கத் துப்பாக்கிகள் இருக்கின்றன. ரக்னா லங்கா அல்ல, அனைத்தையும் அவன்கார்ட் நிறுவனமே முன்னெடுத்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்