யாழ். இந்துக் கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவு: மூன்றாம் நாள் நிகழ்வுகள்

யாழ். இந்துக் கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவு: மூன்றாம் நாள் நிகழ்வுகள்

எழுத்தாளர் Bella Dalima

24 Sep, 2015 | 9:08 pm

யாழ். இந்துக் கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவு விழாவின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றன.

யாழ். இந்துக் கல்லூரியின் 125 ஆவது ஆண்டு நிறைவு விழாவின் மூன்றாம் நாள் நிகழ்வில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார்.

விசேட ஹெலிகொப்டரில் யாழ். இந்துக் கல்லூரி மைதானத்திற்கு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் சென்றிருந்தார்.

கல்வி அமைச்சருடன், மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.

அத்துடன், சிரேஷ்ட ஊடகவியலாளரும் மின்னல் நிகழ்ச்சியின் தொகுப்பாளரும் விழாவின் இணைப்பாளருமான ஜே.ஸ்ரீரங்காவும் இதன்போது பிரசன்னமாகியிருந்தார்.

யாழ். இந்துக் கல்லூரியின் பழைய மாணவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான
ஈஸ்வரபாதம் சரவணபவனும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்தார்.

பாடசாலை நிர்வாகத்தினரால், பிரமுகர்கள் தமிழ் பாரம்பரிய முறைப்படி சம்பிரதாயபூர்வமாக வரவேற்கப்பட்டனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்