புத்திக்க பத்திரணவிடம் 3 மணித்தியாலங்கள்  குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணை 

புத்திக்க பத்திரணவிடம் 3 மணித்தியாலங்கள்  குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணை 

எழுத்தாளர் Bella Dalima

24 Sep, 2015 | 3:54 pm

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரணவிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று சுமார் 3 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.

இராணுவத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறையற்ற கொடுக்கல் வாங்கல் குறித்து புத்திக்க பத்திரண வெளியிட்ட கருத்து தொடர்பிலேயே இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது

வாக்குமூலம் அளித்ததைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டார்.

இதன்போது, இராணுவத்திற்கு உணவு விநியோகிக்கும் போது மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் இது தொடர்பில் மேஜர் ஜெனரல் மற்றும் ஜெனரல் ஆகியோர் மீதே தாம் குற்றச்சாட்டை முன்வைப்பதாகவும் புத்திக்க பத்திரண குறிப்பிட்டார்.

மேலும், குறித்த நபர்களை அவர்களது பிரிவுகளிலிருந்து இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும் இது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்