நடிகை பாவனாவின் தந்தை மரணம்

நடிகை பாவனாவின் தந்தை மரணம்

நடிகை பாவனாவின் தந்தை மரணம்

எழுத்தாளர் Bella Dalima

24 Sep, 2015 | 4:33 pm

பிரபல நடிகை பாவனாவின் தந்தை பாலச்சந்திரன் (59) இன்று காலமானார்.

மலையாளம், தமிழ், தெலுங்குப் படங்களில் நடித்தவர் பாவனா.

மலையாளத்தில் தற்போதும் இவர் முன்னணி நடிகையாக உள்ளார்.

இவரது தந்தை பாலச்சந்திரன், புகைப்படக் கலைஞராக இருந்தார். கடந்த 21 ஆம் திகதி இவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதனையடுத்து, உறவினர்கள் உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி பாலச்சந்திரன் உயிரிழந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்