சம்பளப் பிரச்சினை தொடர்பில் ஹட்டனிலும் கண்டியிலும் தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

சம்பளப் பிரச்சினை தொடர்பில் ஹட்டனிலும் கண்டியிலும் தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Bella Dalima

24 Sep, 2015 | 9:12 pm

சம்பளப் பிரச்சினையை முன்வைத்து ஹட்டன் – பத்தனை மற்றும் கண்டி – பன்வில பிரதேசங்களில் இரு வேறு ஆர்ப்பாட்டங்கள் இன்று முன்னெடுக்கப்பட்டன.

ஹட்டன் – பத்தனை – கெளிவத்தை தோட்டத் தொழிலாளர்கள் கறுப்புப்பட்டி அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளக் கூட்டு ஒப்பந்தம் நிறைவுபெற்று ஐந்து மாதங்கள் கடந்துள்ள போதிலும் இதுவரை எதுவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, 09 கோரிக்கைகளை முன்வைத்து, கண்டி – பன்வில பிரதேச சபைக்குட்பட்ட 10 தோட்டங்களைச் சேர்ந்த மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமக்கான சம்பளம் மற்றும் சம்பள முற்கொடுப்பனவு உரிய திகதியில் வழங்கப்படல், தோட்டங்களை சுத்திகரித்தல் உள்ளிட்ட 9 கோரிக்கைகளை முன்வைத்தே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கேலேபொக்க தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக ஒன்று திரண்ட, ஆர்ப்பாட்டக்காரர்கள், அங்கிருந்து கபரகல – கண்டி பிரதான வீதிக்கு வருகை தந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்