கடுவெல நீதிமன்ற துப்பாக்கிப் பிரயோகத்தின் சந்தேகநபர்களை கைது செய்ய விசேட குழு

கடுவெல நீதிமன்ற துப்பாக்கிப் பிரயோகத்தின் சந்தேகநபர்களை கைது செய்ய விசேட குழு

கடுவெல நீதிமன்ற துப்பாக்கிப் பிரயோகத்தின் சந்தேகநபர்களை கைது செய்ய விசேட குழு

எழுத்தாளர் Staff Writer

24 Sep, 2015 | 6:50 am

கடுவெல நீதவான் நீதிமன்ற வளாகத்தில் சந்தேகநபர் ஒருவர் மீது நேற்று துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ள சந்தேகநபர்களை கைது செய்வதற்காக உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் இரண்டு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, இந்த சம்பவம் இடம்பெறும் போது தப்பி சென்ற கைதிகள் இருவரை தேடும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த சந்தேகநபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்