ஐக்கிய நாடுகள் சபையின் பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்க இலங்கை முன்வந்துள்ளது

ஐக்கிய நாடுகள் சபையின் பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்க இலங்கை முன்வந்துள்ளது

எழுத்தாளர் Bella Dalima

24 Sep, 2015 | 10:44 pm

இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கத் தாம் முன்வந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன் அடிப்படையில், இலங்கைக்குள்ளான நீதிமன்ற செயற்பாடு கிடைப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கமைய, விசேட சட்டத்தரணிகளைக் கொண்ட நிர்வாகம் ஒன்று ஸ்தாபிக்கப்படும் எனவும் அதனூடாக விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பொதுநலவாய நாடுகள் சபை, சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்திலுள்ள சட்டத்தரணிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும் எனவும் அதற்கான அனைத்து சட்டங்களும் இலங்கையில் நிறைவேற்றப்படும் எனவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

அனைத்து நடவடிக்கைகளும் இலங்கை அரசியலமைப்பிற்கு அமைய முன்னெடுக்கப்படும் என சுட்டிக்காட்டிய பிரதமர், அரசியல் தீர்விற்குச் செல்லவும் அதற்குத் தேவையான அரசியலமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வரவும் இணங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்