உலகக்கிண்ண ரக்பி: நியூஸிலாந்தை வழிநடத்தும் வாய்ப்பு 23 வயது ஷேம் கேனுக்குக் கிட்டியுள்ளது

உலகக்கிண்ண ரக்பி: நியூஸிலாந்தை வழிநடத்தும் வாய்ப்பு 23 வயது ஷேம் கேனுக்குக் கிட்டியுள்ளது

உலகக்கிண்ண ரக்பி: நியூஸிலாந்தை வழிநடத்தும் வாய்ப்பு 23 வயது ஷேம் கேனுக்குக் கிட்டியுள்ளது

எழுத்தாளர் Bella Dalima

24 Sep, 2015 | 8:01 pm

உலகக்கிண்ண ரக்பி தொடரில் நபீபியாவுக்கு எதிராக இலங்கை நேரப்படி இன்று நள்ளிரவு நடைபெறும் போட்டியில் நியூஸிலாந்தை வழிநடத்தும் வாய்ப்பு 23 வயதுடைய ஷேம் கேனுக்கு (Sam Cane) கிட்டியுள்ளது.

இதேவேளை, நேற்றைய போட்டிகளில் அவுஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் அணிகள் வெற்றிபெற்றன.

கார்டிப் மிலேனியம் மைதானத்தில் நடைபெற்ற ஏ குழுவுக்கான போட்டியில் அவுஸ்திரேலிய மற்றும் பிஜி அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

சுமார் 67 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் முதல் பகுதியில் 18 – 3 எனும் கணக்கில் அவுஸ்திரேலியா முன்னிலை வகித்தது.

இரண்டாம் பகுதியில் இரண்டு அணிகளும் தலா 10 புள்ளிகளைப் பெற்றுக்கொள்ள 28 – 13 எனும் கணக்கில் அவுஸ்திரேலியாவின் வெற்றி உறுதியானது.

இந்த வெற்றிக்கு அமைவாக ஏ குழுவில் அவுஸ்திரேலியா மூன்றாமிடத்தில் இருக்கிறது.

ருமேனியாவுக்கும் பிரான்ஸூக்கும் இடையிலான போட்டி குயின் எலிசபெத் மைதானத்தில் நடைபெற்றது.

50 ஆயிரம் ரசிகர்கள் திரண்டிருந்த இந்தப் போட்டியில் முதல் பகுதியில் 17 – 6 எனும் புள்ளிகள் பிரகாரம் பிரான்ஸ் முன்னிலை பெற்றிருந்தது.

இரண்டாம் பகுதியில் பிரான்ஸ் மேலும் 21 புள்ளிகளைக் குவிக்க ருமேனிய அணியால் 5 புள்ளிகளையே பெற முடிந்தது.

அதன்படி 38 – 11 எனும் புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்ற பிரான்ஸ் அணி டி குழுவில் முதலிடத்திற்கு முன்னேறியது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்