சஜின் டி வாஸ் குணவர்தன பிணையில் விடுதலை

சஜின் டி வாஸ் குணவர்தன பிணையில் விடுதலை

எழுத்தாளர் Staff Writer

23 Sep, 2015 | 12:45 pm

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தனவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று பிணை வழங்கியுள்ளது.

சஜின் டி வாஸ் குணவர்தன தாக்கல் செய்த பிணை மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்திலேயே இந்த பிணை வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான வாகனங்கள் சிலவற்றை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் சஜின் டி வாஸ் குணவர்தன கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

200 இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும், 10 இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும் அவரை விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மனிலால் வைத்தியதிலக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஒவ்வொரு மாத இறுதி ஞாயிற்றுக்கிழமைகளிலும் குற்றத் தடுப்பு திணைக்களத்திற்கு பிரசன்னமாகுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல்களை விடுக்கும் பட்சத்தில், சஜின் டி வாஸ் குணவர்தனவை மீண்டும் கைது செய்யுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்