ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் யுவதியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்தவர் கைது

ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் யுவதியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்தவர் கைது

ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் யுவதியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்தவர் கைது

எழுத்தாளர் Staff Writer

23 Sep, 2015 | 10:33 am

ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டே ஜப்பான் நட்புறவு வீதியில் உள்ள பற்றைக் காட்டுக்கு அருகே யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யுவதியின் கூச்சலை செவிமடுத்த சாரதிகள் சிலர் பொலிஸ் அவசர அழைப்புப்பிரிவிற்கு வழங்கிய தகவலுக்கு அமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யுவதி தங்கியிருந்த விடுதியின் முகாமையாளராக கடமையாற்றிவந்த அனுராதபுரம் மஹபொத்தான பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 38 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் 18 வயதான யுவதியை மோட்டார் சைக்கிளில் குறித்த பகுதிக்கு அழைத்துச் சென்று துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்துள்ளமை விசாரணைகளில் தெரிவந்துள்ளது.

யுவதி தனமல்வில பகுதியைச் சேர்ந்தவராவார்.

சந்தேகநபர் இன்று கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்