வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் தொடர்கிறது

வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் தொடர்கிறது

எழுத்தாளர் Bella Dalima

23 Sep, 2015 | 9:18 pm

வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்கள் தமக்கான சம்பள நிலுவையை வழங்குமாறு கோரி 6 ஆவது நாளாக இன்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நான்கு மாத சம்பள நிலுவைக்கான தீர்வை வழங்குமாறு கோரி, வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்களுக்கு கடந்த ஜூலை மாத சம்பளம் இரண்டு தடவைகளில் 70 வீதம் மாத்திரமே வழங்கப்பட்டது.

ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கான இரண்டு மாத சம்பளமும் 2014 ஆம் ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான சம்பள நிலுவை உள்ளிட்ட 4 மாத முழுச்சம்பளமும் 30 வீத நிலுவையும் வழங்கப்பட வேண்டிய நிலையிலேயே ஊழியர்களால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஹஜ் பெருநாளைக் கருத்திற்கொண்டு தமக்கான சம்பளத்தினை விரைவில் வழங்குமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, கடந்த பெப்ரவரி மாதம் வாழைச்சேனை கடதாசி ஆலைக்கான மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டதை அடுத்து, தொழிற்சாலையின் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்