யாழ். இந்துக் கல்லூரியின் 125 ஆவது ஆண்டு விழா நடைபவனி

யாழ். இந்துக் கல்லூரியின் 125 ஆவது ஆண்டு விழா நடைபவனி

எழுத்தாளர் Bella Dalima

23 Sep, 2015 | 9:23 pm

யாழ். இந்துக் கல்லூரியின் 125 ஆவது ஆண்டு விழாவின் நடைபவனி இன்று இடம்பெற்றது.

இந்த நடைபவனி இன்று காலை யாழ். இந்துக் கல்லூரியிலிருந்து ஆரம்பமானது.

யாழ். இந்துக் கல்லூரியில் தமிழ் பாரம்பரியத்துடன் ஆரம்பமான நடைபவனி காங்கேசன்துறை வீதி, வைத்தியசாலை வீதி ஊடாக சென்று யாழ். மத்திய கல்லூரியைச் சென்றடைந்தது.

அதனைத் தொடர்ந்து, யாழ். வேம்படி மகளிர் கல்லூரியை சென்றடைந்த நடைபவனி, அங்கிருந்து மீண்டும் யாழ். இந்துக் கல்லூரியைச் சென்றடைந்துள்ளது.

இந்த நிகழ்வில் யாழ். இந்துக் கல்லூரியில் கல்வி பயின்று சர்வதேச நாடுகளில் பல்வேறு துறைகளிலும் உள்ள பழைய மாணவர்களும், உள்நாட்டிலுள்ள பழைய மாணவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

அத்துடன், யாழ். இந்துக் கல்லூரியின் பழைய மாணவரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான ஜே.ஶ்ரீரங்காவும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்