கபிலனை நெகிழ வைத்த ரஜினி

கபிலனை நெகிழ வைத்த ரஜினி

கபிலனை நெகிழ வைத்த ரஜினி

எழுத்தாளர் Staff Writer

23 Sep, 2015 | 12:10 pm

முழு வேகத்தோடு களத்தில் இறங்கிவிட்ட ரஜினி, தொன்னூறுகளில் பார்த்த உற்சாகத்துடன் கபாலியில் அவர் நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் கபாலி படப்பிடிப்பின்போது அப்படத்தில் பாடல்கள் எழுதும் கபிலன் ரஜினியைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

அப்போது சந்திரமுகி படத்தில் கபிலன் எழுதிய பாடல்வரிகளைப் பற்றி கூறியதுடன் கபாலி திரைப்படத்தில் எழுதும் பாடல்களைப் பற்றியும் ரஜினிகாந்த் கேட்டறிந்துள்ளார். அதன்பின்னர், பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.

பௌத்தம் பற்றி பேச ஆரம்பித்த ரஜினி சித்தர் பாடல்கள் மற்றும் மகாபாரதக் கதைகள் பற்றியெல்லாம் பேசியதைக் கேட்டு கபிலன் வியந்து போயுள்ளார். அத்துடன் தன்னுடன் அமர்ந்து உணவருந்துமாறு கபிலனைக் கேட்டுள்ளார்.

எனினும் சாப்பிடத் தயங்கிய கபிலன் தான் இயக்குனருடன் உணவருந்துகின்றேன் என்று கூறியதும் நேராக இயக்குநர் ரஞ்சித்திடம் போய், ‘கபிலன் என்று என்னுடன் சாப்பிடட்டும்’ என்றதும் நெகிழ்ந்து போய்விட்டார் கபிலன்.

23-1442989029-rajini-kabilan45 23-1442989037-rajini-kabilan54 23-1442989043-rajini-kabilan


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்