கடுவெல நீதவான் நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிப் பிரயோகம்; சந்தேகநபர் காயம்

கடுவெல நீதவான் நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிப் பிரயோகம்; சந்தேகநபர் காயம்

கடுவெல நீதவான் நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிப் பிரயோகம்; சந்தேகநபர் காயம்

எழுத்தாளர் Staff Writer

23 Sep, 2015 | 10:14 am

கடுவெல நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இன்று முற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்

நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட சந்தேகநபர் ஒருவரே இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

கடுவலை ரணால பகுதியைச் சேர்ந்த 32 வயதான குறித்த சந்தேகநபர் தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றார்.

சமயா என்றழைக்கப்படும் கருண உதயங்க எனும் இந்த சந்தேகநபருக்கு எதிராக கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் நான்கு வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன.

அவர்களில் மூன்று வழக்குகள் கொலைகளுடன் தொடர்புடையவை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்