ஐ.ம.சு.கூட்டமைப்பின் தேசியப் பட்டியலுக்கு எதிரான வழக்கின்  பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் பிறப்பிப்பு

ஐ.ம.சு.கூட்டமைப்பின் தேசியப் பட்டியலுக்கு எதிரான வழக்கின் பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் பிறப்பிப்பு

ஐ.ம.சு.கூட்டமைப்பின் தேசியப் பட்டியலுக்கு எதிரான வழக்கின் பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் பிறப்பிப்பு

எழுத்தாளர் Staff Writer

23 Sep, 2015 | 1:07 pm

ஐக்கிய மக்கள் சுநத்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் பிரதிவாதிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவித்தல் பிறப்பித்துள்ளது.

இதற்கமைய தேர்தல்கள் ஆணையாளர், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த மற்றும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் பொதுச் செயலாளர்களுக்கும் அறிவித்தல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் தேசியப் பட்டியல் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நீதிமன்றம் அறிவித்தல் பிறப்பித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியலுக்கு எதிராக மஹஜன எக்சத் பெரமுணவின் உப தலைவரான டி.டி.சோமவீர சந்திரசிறி இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் மூலம் நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களை நீக்கி தம்மை பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்குமாறு மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார்

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.டி.நவாஸ் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மேலதிக விசாரணை டிசம்பர் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது

இதேவேளை, தேசியப் பட்டியலுக்கு எதிராக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டியூ.குணசேகர தாக்கல் செய்திருந்த மனு உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

உயர்நீதிமன்ற நீதியரசர்களான ஈவா வனசுந்தர, புவனெக்க அளுவிஹாரே மற்றும் உப்பாலி அபேரத்ன ஆகியோர் அங்கம் வகித்த மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த மனுவை மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் விசாரிக்க முடியும் என இதன்போது பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும் இந்த விடயம் மனுதாரருக்கு மாத்திரம் பொதுவான ஒன்றல்ல என டியூ குண​சேகர சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் வாதங்களை முன்வைத்துள்ளனர்

அரசியல் அமைப்பு மற்றும் மக்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் விடயம் என்பதால் இந்த மனுவை ஐவரடங்கிய நீதியர்சகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்

இந்த கோரிக்கை தொடர்பில் பிரதம நீதியரசருடன் கலந்துரையாட வேண்டியுள்ளதாக நீதியரசர்கள் குழாம் இன்று அறிவித்துள்ளது.

மேலதிக விசாரணை எதிர்வரும் 29 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்