அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் வௌ்ளிக்கிழமை விடுமுறை

அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் வௌ்ளிக்கிழமை விடுமுறை

அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் வௌ்ளிக்கிழமை விடுமுறை

எழுத்தாளர் Staff Writer

23 Sep, 2015 | 12:55 pm

நாடளாவிய ரீதியில் அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் வௌ்ளிக்கிழமை (25) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

நாளை (24) ஆம் திகதி இடம்பெறுகின்ற ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டே அதற்கு அடுத்த நாளான 25 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது சம்பந்தமான சுற்று நிருபம் மாகாண கல்விப் பணிப்பாளர்கள் ஊடாக நாட்டிலுள்ள சகல முஸ்லிம் பாடசாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆயினும் விடுமுறை வழங்கப்பட்டுள்ள நாளுக்கு பதிலாக எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 03 ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலைகள் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசத்திடம் விடுத்த வேண்டுகோளை அடுத்து இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்